தலைநகர் சென்னையில் முதல்கட்டமாக 54 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரெயில் சேவை செயல்பாட்டில் உள்ளது. சென்னையை போல் தமிழகத்தின் பிற முக்கிய நகரங்களான கோவை, மதுரை, சேலம், திருச்சி, நெல்லையிலும் மெட்ரோ ரெயில் திட்டத்தை செயல்படுத்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தமிழகத்தின் மற்ற முக்கிய நகரங்களுக்கு மெட்ரோ ரயில் இயக்குவதற்கான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. சேலம், திருச்சி, திருநெல்வேலியில் மெட்ரோ ரயில் சேவைக்கான விரிவான சாத்தியக்கூறு ஆய்வறிக்கையை தமிழ்நாடு அரசிடம் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சமர்ப்பித்தது.
அதன்படி, திருச்சியில் 26 கி.மீக்கு ஒரு கட்டமாகவும், 19 கி.மீக்கு ஒரு கட்டமாகவும் 45 கி.மீ தூரத்திற்கு வழித்தடம் அமைக்க சாத்தியக்கூறு இருப்பதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சேலத்திலும் மெட்ரோ வழித்தடம் அமைக்க சாத்தியக்கூறு உள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.
நெல்லையை பொறுத்தவரை மெட்ரோ ரெயில் வழித்தடத்திற்கான வாய்ப்பு இல்லை என்றும் லைட் மெட்ரோ மட்டுமே அமைக்க முடியும் என ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்
கருத்துரையிடுக