இந்தியன் ரயில்வே :ஓட்டுனரின் தூக்கத்தை கண்டறியும் கருவி ....


Click here to read in English...
         இன்ஜின்  டிரைவருக்கு தூக்கம் வருவதை, அவரது இமைக்கும் கண்கள் வாயிலாக கண்டுபிடித்து, ரயிலை நிறுத்தும்படி எச்சரிக்கும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப கருவியை வடகிழக்கு எல்லை ரயில்வே உருவாக்கி வருகிறது.

ரயில் ஓட்டுனர்கள் கண்களை இமைப்பதை வைத்து அவர்கள் தூக்க கலக்கத்தில் உள்ளனரா என்பதை கண்டறியும் கருவியை  உருவாக்கும்படி, வடகிழக்கு எல்லை ரயில்வேக்கு ரயில்வே வாரியம் கடந்த ஜூன் மாதம் அறிவுறுத்தியது.

இதையடுத்து, ஆர்.டி.ஏ.எஸ்., எனப்படும், ரயில்வே டிரைவர் உதவி பொறிமுறை என்ற கருவியை வடகிழக்கு எல்லை ரயிலை ரயில்வே உருவாக்க துவங்கியது.

இறுதிக் கட்டத்தை அடைந்துள்ள இந்த கருவி, இன்னும் சில வாரங்களில் பயன்பாட்டுக்கு தயாராகிவிடும் என தொழில் தொழில்நுட்ப பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த கருவி, இன்ஜின் டிரைவரின் கண்கள் இமைப்பதை கவனித்து, அவருக்கு துாக்கம் வருவதை உணர்ந்து எச்சரிக்கும்.

அப்போதும் ரயிலை அவர் நிறுத்தவில்லை எனில், அவசரகால பிரேக்குகள் தானாகவே இயங்கி ரயிலை நிறுத்தும்படி இந்த கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது.




 இந்த கருவி தயாரானதும், சரக்கு மற்றும் பயணியர் ரயில்களில் சோதனை ,  அடிப்படையில் பயன்படுத்தப்படும். அதன் நிறை, குறைகள் ஆராயப்பட்டு, பின் முழு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


கருத்துகள்