5,000 ரயில் இன்ஜின்களில் விரைவில் 'சிசிடிவி கேமரா'.
கடந்த சில மாதங்களாக, ரயில்களில் தீ விபத்து மற்றும் தடம் புரளுதல் போன்ற விபத்துகள் நடக்கின்றன. விபத்துகளை தவிர்த்து, பாதுகாப்பாக ரயில்களை இயக்கும் வகையில், அனைத்து ரயில்வே மண்டலத்திலும் சிக்னல்,பாதை உள்பட பாதுகாப்பு பிரிவுகளில், ரயில்வே வாரியம் ஆய்வு செய்து வருகிறது.
ரயில் நிலைய அதிகாரிகள் அறை, சிக்னல் கட்டுபாட்டு அறைகளில், 'சிசிடிவி கேமரா' பொருத்தி, வீடியோ பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், 5,000 ரயில் இன்ஜின்களில் கேமராக்கள் பொருத்தி கண்காணிக்க வேண்டும் என, அனைத்து மண்டல பொது மேலாளர்களுக்கும், ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், 'தற்போது, 500க்கும் மேற்பட்ட ரயில் இன்ஜின்களில்,கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. அடுத்த கட்டமாக, 5,000 ரயில் இன்ஜின்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. அடுத்த கட்டமாக, 5,000 ரயில் இன்ஜின்களில் கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன' என்றனர்.
ரயில் ஓட்டுனர்கள் கூறுகையில், 'ரயில் இன்ஜின்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் நடவடிக்கையை,நாங்கள் எதிர்க்கவில்லை. அதேபோல, ஓட்டுனர்களுக்கு தேவையான கழிப்பறை உள்ளிட்ட வசதிகளையும் செய்து தர வேண்டும்' என்றனர்.

கருத்துகள்
கருத்துரையிடுக