தீபாவளி பண்டிகை கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த இந்த சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு : கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், பயணிகளின் நலனுக்காகவும் சென்னை எழும்பூர் - தூத்துக்குடி இடையே அதிவிரைவு சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.
சிறப்பு ரெயில் (வண்டி எண். 06001):
இந்த அதிவிரைவு சிறப்பு ரெயில் (வண்டி எண். 06001) நாளை (10.11.2023) மற்றும் 12 ஆகிய தேதிகளில் இரவு 11:45 மணிக்கு எழும்பூரிலிருந்து புறப்பட்டு மறுநாள் மதியம் 12:30 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும்.
இதேபோல மறுமார்க்கமாக, அதிவிரைவு சிறப்பு ரெயில் (06002) 11 மற்றும் 13 ஆகிய தேதிகளில் மாலை 3:30 மணிக்கு தூத்துக்குடியிலிருந்து புறப்பட்டு மறுநாள் காலை 4:45 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடையும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
click here youtube
.jpg)
கருத்துகள்
கருத்துரையிடுக