06109/06110 திருவனந்தபுரம் தாம்பரம் சிறப்பு தொடர் வண்டி சேவை நீட்டிப்பு

திருவனந்தபுரம் - தாம்பரம் வாரந்திர சிறப்பு தொடர்வண்டி ஒரு மாதம் நீட்டிப்பு!

தென்காசி, மதுரை வழியாக இயக்கப்படுகிறது

செப்.15, 2026

தென்னக ரெயில்வேக்கு உட்பட்ட திருவனந்தபுரம் ரெயில் நிலையத்தில் இருந்து தென்காசி, மதுரை வழியாக தாம்பரத்துக்கு வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரெயிலின் சேவை கடந்த 3-ந் தேதியுடன் முடிந்தது. இதற்கிடையே, சிறப்பு ரெயிலின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதையடுத்து, திருவனந்தபுரம்-தாம்பரம் சிறப்பு ரெயில் (வ.எண்.06110) நாளை (புதன்கிழமை) முதல் அடுத்த மாதம் 28-ந் தேதி வரை புதன்கிழமை தோறும் இயக்கப்படும்.

மறுமார்க்கத்தில் இந்த ரெயில் (வ.எண்.06109) தாம்பரத்தில் இருந்து வருகிற 17-ந் தேதி முதல் அடுத்த மாதம் 29-ந் தேதி வரை வியாழக்கிழமை தோறும் இயக்கப்படும்.

இந்த ரெயிலில், 
2 இரண்டடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள், 
4 மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள், 4 மூன்றடுக்கு எகனாமி வகுப்பு குளிரூட்டப்பட்ட பெட்டிகள், 
6 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள் மற்றும் 
4 பொதுப்பெட்டிகள்** இணைக்கப்பட்டிருக்கும்.

ரெயில் இரு மார்க்கங்களிலும்  செங்கல்பட்டு, 
மேல்மருவத்தூர், 
விழுப்புரம், 
விருத்தாசலம், 
அரியலூர், 
ஸ்ரீரங்கம், 
திருச்சி, 
திண்டுக்கல், 
கொடைரோடு, 
மதுரை, 
விருதுநகர், 
சிவகாசி, 
ஸ்ரீவில்லிபுத்தூர், 
ராஜபாளையம், 
சங்கரன்கோவில், 
கடையநல்லூர், 
தென்காசி, 
செங்கோட்டை, 
புனலூர், 
அவனீசுவரம், 
கொட்டாரக்கரை, 
கொல்லம், 
வர்கலா ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த ரெயிலுக்கு 
கழக்கூட்டம்,
தென்மலை, 
திருமங்கலம் ஆகிய ரெயில் நிலையங்களில் நிறுத்தம் வழங்கவேண்டும் என்று தென்மாவட்ட பயணிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்