07535/07536 நாகர்கோவில் <=> சார்லபள்ளி ஆயுத பூஜை சிறப்பு ரெயில்
ஆயுத பூஜை விடுமுறை நாட்களையொட்டி தென் மத்திய ரெயில்வே சார்பில் பயணிகள் கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள சார்லபள்ளியில் இருந்து மதுரை, நெல்லை வழியாக நாகர்கோவிலுக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
சார்லபள்ளி -நாகர்கோவில் சிறப்பு ரெயில் (வண்டி எண் 07535) வருகிற செப்டம்பர் 25-ந்தேதி, அக்டோபர் 2, 9, 16, 23-ந்தேதி ஆகிய வெள்ளிக்கிழமைகளில் இரவு 7.45 மணிக்கு புறப்படுகிறது. இந்த ரெயில் மறுநாள் இரவு 8.40 மணிக்கு நெல்லை வந்து, நாகர்கோவிலுக்கு 9.45 மணிக்கு சென்றடை கிறது.
மறுமார்க்கத்தில் நாகர்கோவில் சார்லபள்ளி சிறப்பு ரெயில் (வண்டி எண் 07536) வருகிற செப்டம்பர் 27-ந்தேதி, அக்டோபர் 4, 11, 18, 25-ந்தேதி ஆகிய ஞாயிற்றுக்கிழமை நாகர்கோவிலில் இருந்து அதிகாலை 12.45 மணிக்கு புறப்படுகிறது. இந்த ரெயில் நெல்லைக்கு அதிகாலை 2.05 மணிக்கு வந்து, மறுநாள் திங்கட்கிழமை அதிகாலை 3.40 மணிக்கு சார்லபள்ளி சென்றடைகிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக