06263/06264 மைசூரு <=> ராமேஸ்வரம் வாராந்திர சிறப்பு ரயில் அக்டோபர் 5 முதல் நவம்பர் 30, 2026 வரை, வழி: பெங்களூர், சேலம், மதுரை. முன்பதிவு அக்டோபர் 2, 2026 காலை 8 மணிக்கு ஆரம்பம்


06263/06264 மைசூரு <=> ராமேஸ்வரம் வாராந்திர சிறப்பு ரயில் அக்டோபர் 5 முதல் நவம்பர் 30, 2026 வரை, வழி: சேலம், மதுரை. முன்பதிவு அக்டோபர் 2, 2026 காலை 8 மணிக்கு ஆரம்பம்


ரயில் எண் 06263 – மைசூரு – ராமேஸ்வரம் சிறப்பு ரயில் வரும் அக்டோபர் 5 முதல் நவம்பர் 30, 2026 வரை திங்கட்கிழமைகளில் மைசூருவில் இருந்து மாலை 6.35 மணிக்கு புறப்படும். மறுநாள் காலை 11.00 மணிக்கு ராமேஸ்வரத்தை சென்றடையும். மொத்தம் 9 சேவைகள் இயக்கப்பட உள்ளன.

மறுமார்க்கத்தில் ரயில் எண் 06264 – ராமேஸ்வரம் – மைசூரு சிறப்பு ரயில் வரும் அக்டோபர் 6 முதல் டிசம்பர் 1, 2026 வரை செவ்வாய்க்கிழமைகளில் ராமேஸ்வரத்தில் இருந்து பிற்பகல் 3.30 மணிக்கு புறப்படும். மறுநாள் காலை 7.45 மணிக்கு மைசூருவை சென்றடையும். இந்த ரயிலும் 9 சேவைகள் இயக்கும்.

இந்த சிறப்பு ரயில்கள் மண்டியா, ராமநகரம், கெங்கேரி, கேஎஸ்ஆர் பெங்களூரு, பெங்களூரு கண்டோன்மென்ட், ஓசூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, மானாமதுரை, பரமக்குடி மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட முக்கிய நிலையங்களில் நின்று செல்லும்.

பெட்டி அமைப்பு
சிறப்பு ரயில்களில்:

2 ஏசி இரண்டடுக்கு பெட்டிகள்

5 ஏசி மூன்றடுக்கு பெட்டிகள்

8 ஸ்லீப்பர் வகுப்பு பெட்டிகள்

4 பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள்

1 மாற்றுத்திறனாளிகளுக்கான இரண்டாம் வகுப்பு பெட்டி

1 லக்கேஜ் மற்றும் பிரேக் வேன்

இடம்பெறும்.

இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு அக்டோபர் 2, 2026 காலை 8.00 மணிக்கு தெற்கு ரயில்வே சார்பில் தொடங்கும்.

கருத்துகள்