பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயில் சேவை: அக்டோபர் 11,2026 முதல் புதிய பயணம்!

அக்டோபர் 11, 2026-ல் தொடங்குகிறது பூந்தமல்லி–வடபழனி மெட்ரோ சேவை!


சென்னையின் பொதுப் போக்குவரத்தில் புதிய அத்தியாயமாக, சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத்தின் பூந்தமல்லி பைபாஸ் – வடபழனி வழித்தடம் வரும் அக்டோபர் 11, 2026 ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. 14.64 கி.மீ. நீளமுள்ள இந்த வழித்தடத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளார். 

இந்த வழித்தடத்தில் மொத்தம் 17 மெட்ரோ நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தொடக்க கட்டத்தில் 11 நிலையங்களில் மட்டுமே ரயில்கள் நின்று செல்லும். இரட்டை அடுக்கு மெட்ரோ பாதையில் அமைந்துள்ள சில நிலையங்கள் பணிகள் முழுமையடையாததால் பின்னர் பயன்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

1. பூந்தமல்லி, 
2. குமணன்சாவடி, 
3. காட்டுப்பாக்கம், 
4. ஐயப்பந்தாங்கல், 
5. போரூர் 
உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான பயணிகளுக்கு இந்த புதிய மெட்ரோ சேவை பெரும் பயனளிக்கும். குறிப்பாக, மேற்குச் சென்னையில் இருந்து வடபழனி மற்றும் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள மெட்ரோ வலையமைப்புடன் இணைப்பு மேலும் எளிதாகும்.

தொடக்கத்தில் ரயில்கள் முழுமையான driverless mode-ல் இயக்கப்படாது. தானியங்கி இயக்க முறையில் பணியாளர்களின் மேற்பார்வையுடன் சேவை நடைபெறும்; முழுமையான driverless operation 2027-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

அக்டோபர் 11 முதல் பூந்தமல்லி–வடபழனி மெட்ரோ சேவை சென்னையின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள்